மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள்

प्रविष्टि तिथि: 15 MAR 2022 6:00PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கால்நடைகளுக்கு உணவு மற்றும் தீவனங்களை மானிய விலையில் தங்களது சொந்த திட்டங்களின் மூலம் பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த வகையில் ஒத்துழைப்புஅளித்து வருகின்றன. மேலும்  இந்திய விலங்கு நல வாரியம் கால்நடை நல அமைப்புகளுக்கு உணவு வழங்க நிதியுதவி அளித்து வருகிறது.  தேசிய கால்நடை இயக்கம், கால்நடை பராமரிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி ஆகிய திட்டங்களின் மூலம் இந்த நிதி வழங்கப்படுகிறது.

 இத்தகவலை மக்களவையில் மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபலா எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***************

 


(रिलीज़ आईडी: 1806284) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu