கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
முக்கிய துறைமுக ஆணையங்கள் சட்டம் 2021-ன் விளைவு
Posted On:
15 MAR 2022 3:13PM by PIB Chennai
முக்கிய துறைமுக ஆணையங்கள் சட்டம் 2021, துறைமுகங்களை நவீனப்படுத்தி அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
துறைமுகங்களை நவீனப்படுத்தி, இயந்திர மயமாக்கி, டிஜிட்டல் மயமாக்கும் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இணையம் சார்ந்த மின்னணு படிவங்கள், நேரடி விநியோகம், சரக்குப் பெட்டக ஸ்கேனர்கள் உள்ளிட்ட நவீன நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
துறைமுகங்களின் சரக்கு கையாலும் திறனை அதிகரிக்கவும், ஏற்றுமதி, இறக்குமதி மூலம் பெருமளவு வருவாய் ஈட்டவும் மேற்கூறிய சட்டம் வகை செய்துள்ளது. இதன் பயனாக துறைமுகங்களின் செயல்திறன் அதிகரித்துள்ளது.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல்துறை, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1806199)