பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டில் 5ஜி போர் விமானம் தயாரிக்க மத்திய அரசு திட்டம்: மாநிலங்களவையில் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2022 2:58PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய்பட் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரக போர் விமானத்தின் (ஏஎம்சிஏ) மாதிரியை உருவாக்குவதற்கு பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலை பெறும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
சிறப்பு அம்சங்கள் காரணமாக 5ஜி போர் விமானங்கள், 4ஜி போர் விமானங்களை விட விலை அதிகமாக உள்ளன. ஆகையால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏஎம்சிஏ என்ற 5ம் தலைமுறை போர் விமானத்தின் விலை, வெளிநாடுகளில் கிடைக்கும் 5ஜி போர் விமான விலையை விட குறைவானதாக இருக்கும்.
*****************************
(வெளியீட்டு அடையாள எண்: 1805967)
வருகையாளர் எண்ணிக்கை : 228