உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
அடுத்த 5 ஆண்டுகளில் புதிய மற்றும் தற்போதுள்ள விமான நிலையங்கள் ரூ.25,000 கோடி மூலதன செலவுடன் மேம்படுத்தப்படும்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2022 3:28PM by PIB Chennai
அடுத்த 5 ஆண்டுகளில் புதிய மற்றும் தற்போதுள்ள விமான நிலையங்கள் ரூ.25,000 கோடி மூலதன செலவுடன் மேம்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
தில்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் 2025-க்குள் ரூ.30,000 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் புதிய பசுமை விமான நிலையங்களில் ரூ.36,000 கோடி முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். 21 பசுமை விமான நிலையங்கள் அமைப்பதற்கு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805761
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1805860)
வருகையாளர் எண்ணிக்கை : 213