ஜவுளித்துறை அமைச்சகம்
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்திய சந்தை மேலும் வளர்ச்சியடைவதற்கும், உலகளாவிய சந்தையைக் கைப்பற்றுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பை தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிஎம் மித்ரா வழங்குகின்றன: திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
Posted On:
12 MAR 2022 6:28PM by PIB Chennai
தொழில்நுட்ப ஜவுளியில் வெற்றிகரமான முன்னேற்றத்தை உருவாக்குதல் எனும் தலைப்பிலான ஒரு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டை இந்திய தொழில்கள் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்தது. .
ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தலைமையில் ‘சிஇஓ ஸ்பீக்’ எனும் சிறப்பு அமர்வு இந்த மாநாட்டில் நடைபெற்றது. தொழில்நுட்ப ஜவுளியின் திறன், புவிசார் ஜவுளி, வேளாண் ஜவுளி, சிறப்பு நார்கள், பாதுகாப்புத் துறைகான ஜவுளி, விளையாட்டுத் துறைக்கான ஜவுளி மற்றும் மருத்துவத் துறைக்கான ஜவுளி ஆகியவற்றில் கழிவுப் பொருள் பயன்பாடுகள், வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இடம்பெற்றன.
சுமார் 1000 பங்கேற்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், மாநில அரசு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற தொழிலதிபர்கள் (நேரடி மற்றும் காணொலி மூலம்) இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தொழில்நுட்ப ஜவுளியின் முக்கியத்துவத்தையும், ஜல் ஜீவன் இயக்கம் உட்பட இந்திய அரசின் பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் திட்டங்களின் மூலம் தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் லட்சியத்திற்கு பங்களிக்கும் திறனையும் எடுத்துரைத்தார்.
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்தியச் சந்தை மேலும் வளர்ச்சியடைவதற்கும், உலகளாவிய சந்தையைக் கைப்பற்றுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பை தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிஎம் மித்ரா வழங்குகின்றன என்று திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கூறினார்.
தோட்டக்கலை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய முதலீட்டு வழித்தடம் மற்றும் முக்கிய துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி உள்ளிட்டவை உள்நாட்டு சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805372
**********************
(Release ID: 1805394)