விண்வெளித்துறை
ஜம்மு பிராந்தியத்தில் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் புதுமைகளுக்கு புதிய கதவுகளை விண்வெளி தொழில்நுட்பம் திறக்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
12 MAR 2022 5:58PM by PIB Chennai
வட இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை ஜம்முவில் இன்று திறந்து வைத்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு பிராந்தியத்தில் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் புதுமைகளுக்கு புதிய கதவுகளை விண்வெளி தொழில்நுட்பம் திறக்கும் என்றார்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று கூறிய அவர், பெரும்பாலான விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த காலங்களில் தென் மாநிலங்களில் மட்டுமே இருந்தன என்றும், பொறியியல், ஏரோநாட்டிக்ஸ் மற்றும் பிற பிரிவுகளுக்கான ஒரே இந்திய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது என்றும் கூறினார்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் ஜம்மு & காஷ்மீரில் விண்வெளி மையம் மற்றும் பயிற்சி நிறுவனங்களைத் திறப்பது, கேரளாவிலிருந்து காஷ்மீர் வரையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான விண்வெளி வெற்றிப் பயணத்தை குறிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சதீஷ் தவானின் பெயரை மையத்துக்குச் சூட்டுவது அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறிய டாக்டர் சிங், ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கூட இது வரை அவரது பெயர் சூட்டப்படவில்லை என்றார்.
டோக்ரா பெருமையின் ஒளிரும் சின்னமாக விண்வெளி தொழில்நுட்பத்தின் தலைவரான சதீஷ் தவான் விளங்குவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் புகழாரம் சூட்டினார்.
விண்வெளித் தொழில்நுட்பத்தின் மூலம், வரவிருக்கும் காலங்களில் விண்வெளிப் பொருளாதாரம், விண்வெளி ஒத்துழைப்பு, விண்வெளி இராஜதந்திரம் மற்றும் விண்வெளி வெற்றி ஆகியவை சாத்தியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805364
***********************
(Release ID: 1805385)
Visitor Counter : 226