வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ருத் 2.0 –ன் கீழ், நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் துறையில் முன்மாதிரி ஸ்டார்ட் அப் திட்டத்தை திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்

Posted On: 12 MAR 2022 1:48PM by PIB Chennai

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் துறையில் முன்மாதிரி ஸ்டார்ட் அப் திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், அடல் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான இயக்கம் அம்ருத் 2.0 கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி லக்னோவில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இதற்கான அமைச்சரவை ஒப்புதல் அக்டோபர் 12-ல் வழங்கப்பட்டது.

பிரதமரின் தொலை நோக்கு அடிப்படையில், நீர்/பயன்படுத்தப்பட்ட நீர் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலமான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கமளித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், அமைச்சகம் 100 ஸ்டார்ட் அப்களைத் தேர்வு செய்யும். இவற்றுக்கு நிதி ஆதரவாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் திரு ஹஃதீப் சிங் பூரி, ஸ்டார்ட் அப்களுக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்தார். அம்ருத் 2.0 தனித்துவம் வாய்ந்த உன்னதத் திட்டம் என்று கூறிய அவர், இதற்காக ரூ.2.77 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

***************



(Release ID: 1805349) Visitor Counter : 279