ஆயுஷ்
ஸ்ரீநகரில் உள்ள யுனானி மருத்துவத்திற்கான மண்டல ஆராய்ச்சி நிறுவனம் உயர்சிறப்பு மையமாக உருவாக்கப்படும்: திரு சர்பானந்தா சோனோவால்
प्रविष्टि तिथि:
10 MAR 2022 6:14PM by PIB Chennai
“நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான யுனானி மருத்துவத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து” என்ற சர்வதேச மாநாட்டை மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஸ்ரீநகரில் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்ரீநகரில் உள்ள யுனானி மருத்துவத்திற்கான மண்டல ஆராய்ச்சி நிறுவனம் உயர்சிறப்பு மையமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். ஆயுஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்த் துறை இணை அமைச்சர் டாக்டர் முன்ஜபரா மகேந்திரபாய் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு சமநிலை மற்றும் சத்தான உணவு முக்கியம் என்று திரு சோனோவால் கூறினார். யுனானி மருத்துவர்கள் மருந்துகளுடன் உணவில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். இது தொடர்பாக, யுனானி மருத்துவத்திற்கான மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தை உயர்சிறப்புப் ஆயுஷ் மையமாக மேம்படுத்த அமைச்சகம் விரும்புகிறது என்று அவர் கூறினார்.
யுனானி மருத்துவப் பயிற்சிக்கான அளவுகோல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளதாகவும், நல்ல தரமான யுனானி மருத்துவச் சேவைகளுக்கான பயிற்சித் தேவைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்த ஆவணம் நிவர்த்தி செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களுக்குமான விரிவான வழிகாட்டுதல்களை யுனானி மருத்துவம் வழங்குகிறது என்று டாக்டர் முன்ஜபரா மகேந்திரபாய் தமது உரையில் கூறினார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ உணவுகள் மூலம் கொவிட்-19க்கு எதிரானப் போராட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுஷ் அமைப்பின் பங்கை அவர் பாராட்டினார். யுனானி மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிசிஆர்யூஎம்-ன் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804821
**********
(रिलीज़ आईडी: 1804889)
आगंतुक पटल : 364