ஜல்சக்தி அமைச்சகம்
2022 மார்ச் 9 அன்று கொல்கத்தாவில் நடைபெறும் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் மண்டல மாநாட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் தலைமை தாங்குவார்
Posted On:
08 MAR 2022 2:15PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஊரகத் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆறு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் மண்டல மாநாட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்குவார். இந்த மாநாடு 2022 மார்ச் 9 அன்று கொல்கத்தாவில் நடைபெறும்.
இந்த மாநாட்டில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல், பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மிசோரம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள், ஊரகக் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், நேரடியாக பங்கேற்பார்கள்.
இந்த மாநாடு குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில், “வீடு தோறும் குடிநீர் என்ற திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே முதன்மையான ஈடுபாடு கொண்டுள்ள பெண்கள், முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்” என்றார். அவ்வப்போது தண்ணீரின் தரத்தை சோதனையிடுவதற்கு பயிற்சி மேற்கொள்வதிலும் திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தலிலும் ஒரு பகுதியாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803892
-------
(Release ID: 1804030)
Visitor Counter : 185