நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை அதிகாரப்படுத்துதலை நிலக்கரித் துறை மேலும் ஊக்குவிக்க வேண்டுமென அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்

Posted On: 08 MAR 2022 4:15PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளிலும், பாலின சமத்துவத்தை மேம்படுத்த வேண்டுமென மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். 2022-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ள அமைச்சர், பெண் தொழிலாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, இந்தியாவின் முன்னணி பெண் பெருவணிக தொழில்முனைவு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

 நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகா ரத்னா எனப்படும் பொதுத்துறை நிறுவனமான சிஐஎல்-லில் சுமார் 20,000 பெண் தொழிலாளர்கள் சுரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிகிறார்கள். சிஐஎல்லில் பாலின சமத்துவம் அவர்களுக்கு சம வாய்ப்புகளை அளித்துள்ளது.

***************


(Release ID: 1804003) Visitor Counter : 401