நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு ராவ்சாஹேப் படீல் டான்வே வலியுறுத்தியுள்ளார்

Posted On: 07 MAR 2022 3:00PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப்  பெருவிழாவின் ஒரு பகுதியாக நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு வாரவிழாவை மத்திய நிலக்கரி சுரங்கம் மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சர் திரு ராவ்சாஹேப் படீல் டான்வே இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாகப்  பங்கேற்ற மத்திய நிலக்கரி சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலஹாத் ஜோஷி, நமது நாட்டின் சுதந்திர போராட்டத்தின் மிகப் பெரும் பங்காற்றிய ஆண், பெண் மற்றும் இளைஞர்கள் வருங்காலத்திலும் போற்றப்படுவார்கள் என்று கூறினார்.   எரிசக்தித் துறையிலும், தற்சார்பு இந்தியா இயக்கத்திலும் நிலக்கரித்துறை மேலும் பங்களிப்புச்  செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராவ்சாஹேப் படீல் டான்வே, நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அத்துறையைக் கேட்டுக் கொண்டார்.  இதன் மூலம் இறக்குமதி குறைக்கப்பட்டு  நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மேம்படும் என்று குறிப்பிட்டார். பொதுத்துறை நிறுவனமான நிலக்கரித்துறை நிறைவேற்ற வேண்டிய சமூக பொறுப்புடமையின் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.  நிலக்கரி சுரங்கங்களின் அருகே வசிக்கும் மக்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை  உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நிலக்கரித்துறை செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின், நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவேற்ற  நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803558

                                                                                **********************(Release ID: 1803668) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Marathi , Hindi