வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


இந்த மெட்ரோ புனேயில் போக்குவரத்தை எளிதாக்கும், மாசு மற்றும் நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கும், புனே மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்

12 கி.மீ தூரப்பாதை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது, எஞ்சிய 21 கி.மீ 2023 மார்ச் மாதத்தில் இயங்கும்

11,400 கோடி ரூபாய் மெட்ரோ திட்டம் 33.2 கி.மீ தொலைவுக்கு 30 ரயில் நிலையங்களைக் கொண்டது

Posted On: 06 MAR 2022 3:47PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி புனே மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். புனேயில் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2014 வரை சில நகரங்களில் மட்டும் மெட்ரோ சேவை வசதி இருந்ததாக குறிப்பிட்டு , இன்று 24-க்கும் மேற்பட்ட நகரங்கள் மெட்ரோ ரயில் திட்ட பயனை பெற்றுள்ளது அல்லது அதன் பயன் விரைவில் கிடைக்க உள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில், மும்பை, தானே, நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட் புனே ஆகியவை பயனடைந்துள்ளன. ‘ இந்த மெட்ரோ புனேயில் போக்குவரத்தை எளிதாக்கும், மாசு மற்றும் நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கும், புனே மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும்’’ என்று பிரதமர் கூறினார்.  புனே மக்கள் குறிப்பாக வசதி மிக்கவர்கள் மெட்ரோ  மற்றும் இதர பொது போக்குவரத்து சாதனங்களை  பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பது சவாலாகவும், அதேசமயம் வாய்ப்பாகவும் உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். நகரங்களில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு , துரித மக்கள் வாகன முறையே சரியான பதிலாக இருக்கும். நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில், பசுமை போக்குவரத்து, மின்சார பேருந்துகள், மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அதிக அளவில் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், மக்கள் அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்தும் நிலையை சுட்டிக்காட்டினார். கழிவிலிருந்து வருவாய் உருவாக்கும் கோபர்தான் திட்டம், உயிரி எரிபொருள் நிலையங்கள், எல்இடி பல்பு பயன்பாடு ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

புனே மெட்ரோ திட்டம் பற்றிய விரிவான விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803341

*********


(Release ID: 1803395) Visitor Counter : 287


Read this release in: English , Urdu , Hindi , Manipuri