புவி அறிவியல் அமைச்சகம்
மிகஉயர்ந்த இமயமலையை ஒட்டியுள்ள புவிசார் வளங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும், இது இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பங்களிக்க வல்லது என்றும், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டறிவதில் அரசு செயலாற்றி வருவதாகவும், வலுவான பொருளாதார கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இது உதவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
வாடியாவில் உள்ள ஹிமாலயன் புவியியல் நிறுவன வளாகத்தில் (WIHG) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் போக்குவரத்திக்கான விடுதியை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
வாடியாவில் உள்ள ஹிமாலயன் புவியியல் நிறுவனம் என்பது இமயமலையின் புவி இயக்கவியல் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்காகவும், அறிவியல் பூர்வமாக சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்க்கான இதர பல்வேறு விஷங்கள் குறித்து ஆய்வு செய்யும் இமயமலை புவி அறிவியல் பற்றிய ஒரு பிரத்யேக ஆராய்ச்சி நிறுவனமாகும்.
Posted On:
06 MAR 2022 1:19PM by PIB Chennai
இமயமலை பகுதிகளில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நாடு முழுமைக்கும் பல்வேறு வழிகளில் பங்களிக்கக் கூடிய உயரமான இமயமலைப் பகுதியின் புவிசார் வளங்கள் குறித்து இன்னமும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; மாநில அமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளின் இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
வாடியாவில் உள்ள ஹிமாலயன் புவியியல் நிறுவன வளாகத்தில் (WIHG) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் போக்குவரத்திக்கான விடுதியை திறந்து வைத்துப் பேசிய மத்திய அமைச்சர், இந்த விடுதி ஆராய்ச்சியாளர்களுக்கு, குறிப்பாக பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று என்றும், இது வசதியான பணிச்சூழலை எளிதாக்கும் என்றும் உறுதிபட கூறினார்.
சுமார் 60 முனைவர் பட்டம் மற்றும் 12 முதுகலை பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்தில் புவி அறிவியல் ஆய்வின் அடிப்படையில் இமயமலையின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்நிறுவனத்தில் முழுமையான அதிநவீன பகுப்பாய்வு வசதிகள் மற்றும் தரவு செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்நிறுவனத்திற்குள் உள்ள ஆராய்ச்சியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதுடன், மற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கும் தரமான தகவல் தரவுகளை வழங்குகிறது. 1968-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் போக்குவரத்து விடுதி போன்ற வசதிகள் இல்லை என்ற நிலையிலிருந்து தற்போது 40 அறைகள் கொண்ட விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்கள் நீண்ட நேரம் தங்கள் ஆராய்ச்சியைத் தொடரவும், இந்நிறுவனத்தில் உள்ள ஆய்வக வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தவும் உதவிடும் என்று அமைச்சர் கூறினார்.
இமயமலையின் புவி இயக்கவியல் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்காக வாடியாவில் உள்ள ஹிமாலயன் புவியியல் நிறுவனம் WIHG இமயமலை புவி அறிவியல் குறித்த ஒரு பிரத்யேக ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்; அறிவியல் பூர்வமாக சமூக மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் நிலநடுக்கம், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், திடீர் வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் புவிசார் அபாயங்கள் குறித்த அறிவியல் விளக்கம், மதிப்பீடு, மேலாண்மை மற்றும் தணிப்பு ஆகியவற்றை வழங்கும் நோக்கத்துடன்; புவிவெப்பம், தாதுக்கள், தாதுப் பொருட்கள், ஹைட்ரோகார்பன்கள், நீரூற்றுகள், ஆற்றங்கரை அமைப்பு போன்ற புவிசார் வளங்கள் குறித்தும் இந்நிறுவனம் ஆய்வு செய்யும். தற்போதைய பருவநிலை மாற்ற சூழ்நிலையில் பனிப்பாறை இயக்கவியல் மற்றும் காலநிலை-டெக்டோனிக் தொடர்புகளைப் அறிந்து கொள்வதில் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.
உயரமான பனிப்பாறைகளுக்கு மேல் நிலவும் பருவநிலை மாற்றம், அதன் காரணமாக நீர்ப்பாசனம், குடிநீர், தொழில்துறை, உள்நாட்டுப் பயன்பாடுகள், நீர்மின் உற்பத்தித் திட்டங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாரமாக உள்ள கீழ்நிலை நதி அமைப்புகளில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் கூறினார். இவைதவிர, நீர் மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டை வழங்குவதுடன், இமயமலைப் பகுதிகளில் சாலை கட்டுமானம், ரோப்வே, ரயில்வே, சுரங்கப்பாதை போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டையும் இந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
மிகப்பெரிய சுகாதார நெருக்கடியான கொரோனா தொற்றுநோய், ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி ஆகியவை பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் இது போன்ற சவால்களை எதிர்கொள்ளவும், பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய உதவிடும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, தொழில்துறை விரிவாக்கம், மேலாண்மை மற்றும் புவிசார் அபாயங்களை தணித்தல், சூழலியல் மற்றும் பல்லுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் புவி அறிவியல் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803316
******
(Release ID: 1803327)
Visitor Counter : 301