பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ செவிலியர் சேவை, செவிலியர் கல்லூரியின் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2022 4:51PM by PIB Chennai

செவலியர் கல்லூரியின் 2021 முதலாமாண்டு  பிஎஸ்சி செவிலியர் மாணவர்களின் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி புதுதில்லியில் 2022, மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தங்களது தொழில்பணியை தொடங்கும் வகையில், 30 ராணுவ செவிலியர் மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர் . இந்நிகழ்ச்சியில் ராணுவ மருத்துவமனையின் கமாண்டட் லெப்டினன்ட் ஜெனரல் ஏ. கே . ஜிண்டால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செவிலியர் படிப்பில்  சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.                                                                                                                                         பின்னர் அடுத்த தலைமுறைக்கு அறிவையும் ஞானத்தையும்  அளிக்கும் வகையில், குத்துவிளக்கு முதலாம் ஆண்டு பிஎஸ்சி செவிலியர் படிப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803180

                                                                                ************************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1803211) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी