அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தில் மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
प्रविष्टि तिथि:
05 MAR 2022 4:02PM by PIB Chennai
மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் அனைத்து ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான பள்ளிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 வருடங்களாக உள்நாட்டிலும் உலக அளவிலும் பொருட்கள் ஆராய்ச்சியில் முன்னோடியாக இந்த மையம் திகழ்கிறது.
பெங்களூரு அருகே ஜக்கூர் என்னுமிடத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் கிளையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு டாக்டர் எஸ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
புதிய சிந்தனைகள், புதிய எண்ண வடிவங்கள், புதிய வசதிகள் ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், ஆராய்ச்சி மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் நோக்கங்களை, மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் நடவடிக்கைகள் மூலம் உணர முடியும் என்று அவர் கூறினார்.
இவ்விழாவில் பேசிய அந்த மையத்தின் தலைவர் பேராசிரியர் குல்கர்னி, மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சர்வதேச அளவில் புகழ் பெற்றது என்றும், அதன் பேராசிரியர்கள் இந்தியாவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803167
***************
(रिलीज़ आईडी: 1803195)
आगंतुक पटल : 282