பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவி கண்காணிப்பு செயற்கைகோளில் (இஓஎஸ் 04) பயன்படுத்தப்பட்ட மோனோலித்திக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகளை (MMICs) உருவாக்கியுள்ளது டிஆர்டிஓ

Posted On: 04 MAR 2022 6:02PM by PIB Chennai

மோனோலித்திக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகளை (MMICs), ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.  இது இஸ்ரோ கடந்த பிப்ரவரி 14ம் தேதி விண்ணில் ஏவிய புவி கண்காணிப்பு செயற்கை கோள் இஓஎஸ் 04-ல் உள்ள ரேடாரில் பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.  பல மோனோலித்திக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகள் (MMIC), டிஆர்டிஓ-வின் திடநிலை இயற்பியல் ஆய்வகத்திலும், கலிலியம் ஆர்சனேட் தொழில்நுட்ப மையத்திலும் (கேடெக்) வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த எம்எம்ஐசி சுற்றுகளை பயன்படுத்திதான், செயற்கைகோளில் உள்ள படம்பிடிக்கும் ரேடாரில் பயன்படுத்தப்படும் டிஆர்-தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு விண்வெளி திட்டங்களுக்காக கேடெக் மையத்தில் 30,000க்கும் மேற்பட்ட டிஆர்- தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இரண்டு முன்னணி தொழில்நுட்ப துறைகள், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு சாதனைக்கு இது உதாரணமாக உள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எம்எம்ஐசிக்கள், தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. 

                                                                                                ****************

 


(Release ID: 1803056) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Hindi