கலாசாரத்துறை அமைச்சகம்
தூய்மை மற்றும் சுதந்திரத்தை கொண்டாடும் நிகழ்ச்சி: சுலப் இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து கலாச்சாரத்துறை அமைச்சகம் நாளை நடத்துகிறது
Posted On:
04 MAR 2022 5:49PM by PIB Chennai
கலாச்சாரத்துறை அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவை சுலப் இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவத்தின் கீழ், தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தூய்மை, சுதந்திரம் மற்றும் அணுகல்’ என்ற நிகழ்ச்சியை புதுதில்லியில் நாளை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வில் சுலப் சுகாதாரம், சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமைகள் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர்.பிந்தேஸ்வர் பதக், உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் பதஞ்சலி யோக பீடத்தின் யோகா குரு பாபா ராம்தேவ் காணொலி மூலம் உரையாற்றுகிறார். இன்னும் பல பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
அம்ரித் மஹோத்ஸவத்தின் சிறப்பு திரைப்படமும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது. இதில் தூய்மையை மேம்படுத்துவது குறித்த புதிய கருத்துக்கள் குறித்தும் குழு விவாதம் நடத்தப்படும்.
மாலையில் நடைபெறும் தூய்மை பற்றிய நிகழ்ச்சியில் திரு. விஜய் கோயல் உரையாற்றுகிறார். சரஸ்வதி ஸ்துதி நிகழ்ச்சியை டாக்டர். சுஷ்மிதா ஜா வழங்குகிறார்.
துருவ் எனும் சமஸ்கிருத இன்னிசைக் குழுவின் கச்சேரியும் நடத்தப்படுகிறது. இது இந்தியாவின் மிகப் பழமையான வேத பாரம்பரிய அடிப்படையில், சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் உலகின் ஒரே இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டித அனுராதா பால் மற்றும் சுஃபோரா இன்னிசை குழுவின் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
***************************
(Release ID: 1803051)
Visitor Counter : 241