பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ தளவாட கொள்முதல் 2020-ன்படி, மேக்-1-ன் (அரசு நிதி மூலம்) கீழ் 4 திட்டங்களுக்கும், மேக்-2-ன் (தொழிற்சாலைகள் நிதி மூலம்) கீழ் 5 திட்டங்களுக்கும் பாதுகாப்புத்துறை கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 03 MAR 2022 1:39PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு அடைந்த இந்தியாவை’ உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பிற்கு ஊக்கமளிக்கும் விதமாக, ராணுவ தளவாட கொள்முதல் 2020-ன்படி, மேக்-1 பிரிவில் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த 4 திட்டங்களை இந்திய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி பாதுகாப்பு அமைச்சகம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்தத் திட்டங்களின் ப்ரோட்டோ டைப் தயாரிப்பை மேற்கொள்ள தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். பாதுகாப்புத் துறையின் கூட்டுக்குழு கொள்கை அளவில்  ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களின் விவரம் வருமாறு :

  • இந்திய விமானப்படை : இந்திய பாதுகாப்பு நடைமுறைகளின்படி தொலைத்தொடர்பு சாதனம் (ரவுட்டர், சுவிட்சுகள், என்கிரிப்டர்ஸ், விஓஐபி, தொலைபேசி மற்றும் அவற்றுக்கான மென்பொருள்)
  • இந்திய விமானப்படை தரைகட்டுப்பாடு சாதனத்துடன் கூடிய ஏர்போர்ன் எலக்ட்ரோ ஆப்டிக்கல் பாட்
  • இந்திய விமானப்படை : ஏர்போர்ன் ஸ்டான்ட் –ஆஃப் ஜாமர்
  • இந்திய ராணுவம் : இந்திய இலகு ரக பீரங்கி

தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் கூடிய மேக்-2 திட்டங்கள் வருமாறு:

  • இந்திய விமானப்படை : அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான ஃபுல் மோஷன் சிமுலேட்டர்
  • இந்திய விமானப்படை : சினூக் ஹெலிகாப்டர்களுக்கான ஃபுல் மோஷன் சிமுலேட்டர்
  • இந்திய விமானப்படை : விமானப் பழுதுபார்ப்பின் போது அணிந்து கொள்ளக்கூடிய ரோபோட்டிக் சாதனம்
  • இந்திய ராணுவம் : இயந்திரமயமாக்கப்பட்ட படைகளுக்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் டார்கெட்டிங் சாதனம்
  • இந்திய ராணுவம் தானாக இயங்கும் போர் கவச வாகனம்

இதுபோன்ற சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவது இந்திய பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் வடிவமைப்பு திறனை பயன்படுத்தவும், இதுபோன்ற தொழில்நுட்பங்களில் இந்தியாவை முன்னணி வடிவமைப்பு நாடாக மாற்றவும் உதவிகரமாக இருக்கும்.

***************


(रिलीज़ आईडी: 1802678) आगंतुक पटल : 322
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali