நிலக்கரி அமைச்சகம்
11 நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி விற்பனைக்காக 26 டெண்டர்கள் வந்துள்ளன
प्रविष्टि तिथि:
02 MAR 2022 4:27PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் நியமனம் செய்த அமைப்பு மூலம் நிலக்கரி விற்பனைக்கான நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏலத்திற்கான தொழில்நுட்ப டெண்டர்களை தாக்கல் செய்ய கடைசி நாளான பிப்ரவரி 28-ம் தேதி வரை. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பெறப்பட்ட டெண்டர் ஆவனங்கள் இன்று காலை 10 மணியளவில், ஏலதாரர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன.
11 நிலக்கரி சுரங்கங்களுக்காக மொத்தம் 26 டெண்டர்கள் பெறப்பட்டன. டெண்டர்களை திறக்கும் நடவடிக்கை வெளிப்படையாக நடைபெற்றது. நிலக்கரிக்கான டெண்டர் கோரிய நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்திற்குச் சொந்தமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் ஒன்றாகும்.
டெண்டர்கள் அனைத்தும் பன்நோக்கு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவால் மதிப்பிடப்பட்டு, தொழில்நுட்ப ரீதியில் தகுதியுள்ள டெண்டர்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 24-ம் தேதி எம்.எஸ்.டி.சி வலைதளத்தில் மின்னனு ஏலம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802330
***************
(रिलीज़ आईडी: 1802391)
आगंतुक पटल : 198