பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவின் தலைமை பொறுப்பை ஏர் மார்ஷல் எஸ். பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.

Posted On: 01 MAR 2022 4:06PM by PIB Chennai

தில்லியை தளமாகக் கொண்டு செயல்படும் மேற்கு விமானப்படை பிரிவின் தலைமை பொறுப்பை ஏர் மார்ஷல் ஸ்ரீகுமார் பிரபாகரன் 01 மார்ச் 2022 அன்று ஏற்றார்.

புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற இவர், 22 டிசம்பர் 1983-ல் போர் விமானியாக இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்பட்டார். பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, வெலிங்டன் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி, புதுதில்லி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் பிரபாகரன், 5000 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர்.

38 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில், பல்வேறு பணிகள் மற்றும் பொறுப்புகளை இவர் திறம்பட ஆற்றியுள்ளார். பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், விமானப் போர் பயிற்சி கல்லூரியின் தலைவராகவும், எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய மிஷனில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும், விமானப் பணியாளர் உளவுப்பிரிவின் உதவித் தலைவராகவும், தலைமை இயக்குநராகவும் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) பல்வேறு பொறுப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார். தற்போதைய நியமனத்திற்கு முன்பு ஹைதராபாத் விமானப்படை அகாடமியின் தளபதியாக இருந்தார்.

வாயு சேனா பதக்கம் மற்றும் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை ஏர் மார்ஷல் ஸ்ரீகுமார் பிரபாகரன் பெற்றுள்ளார் .

இந்திய விமானப் படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவை செய்து 28 பிப்ரவரி 2022 அன்று ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் அமித் தேவுக்குப் பின், விமானப்படையின் மேற்கு பிரிவின் தலைவராக ஏர் மார்ஷல் எஸ். பிரபாகரன் பதவியேற்றுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802096

                           ***********************

 

 

 



(Release ID: 1802139) Visitor Counter : 228