மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 49 ஆசிரியர்களுக்கு தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி) விருதுகள் : மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வழங்கினார்

Posted On: 28 FEB 2022 6:27PM by PIB Chennai

நாடு முழுவதும் 49 ஆசிரியர்களுக்கு, தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி)  விருதுகளைமத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தேசியக்  கல்விக்  கொள்கை-2020, கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகளில்  தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது, மொழித்  தடைகளை அகற்றுகிறது, கல்வித்  திட்டங்கள் மற்றும் மேலாண்மையுடன், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்பதை அதிகரித்துள்ளது.

முழுமையான கல்வித்  திட்டத்தின் கீழ், ஐசிடி தலையீடு, பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப் கட்டமைப்பை வழங்கும். இதன் மூலம் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்  கல்வியில் புதுமையான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தி கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும்.

டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தும் திக்‌ஷா, இ-பாடசாலை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஐசிடி பாடத்திட்டம், இளம் மாணவர்களின் தீவிரக்  கற்றலுக்கான கல்வி இணையதளங்கள்( ஸ்வயம்), ஒரு வகுப்புக்கு ஒரு  சேனல் என்ற பி.எம்.இ-வித்யாபள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழு மேம்பாட்டுக்கான ஆன்லைன் பயிற்சித்  திட்டம் (நிஷிதா) ஆகியவை முன்னணித்  திட்டங்களாக உள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் சமூக, அரசியல், பொருளாதார அல்லது பூகோளத்  தடைகளைத்  தாண்டி தரமான கல்வி பெறுவதற்கு உதவுகின்றன.

நாட்டின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. இந்திய சமூகத்தில் ஆசிரியர்களுக்கு அதிக மரியாதை அளிக்கப்படுகிறது. கல்வித்துறையில் அயராத முயற்சிகள் மேற்கொண்டு, புத்தாக்கத்தை ஏற்படுத்தி, கொவிட் தொற்று காலத்தில் பள்ளிகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்  அனைவருக்கும்  வாழ்த்துக்கள்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி  பேசினார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801851

                                                                                *************************

 


(Release ID: 1801925) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Hindi , Punjabi