பாதுகாப்பு அமைச்சகம்
முதலீடு4iDEX மற்றும் மந்தன் 2022 ஆகியவை வரவிருக்கும் பாதுகாப்புக்கு கண்காட்சி 2022 இல் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்
Posted On:
28 FEB 2022 5:11PM by PIB Chennai
2018 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட பாதுகாப்பு சிறப்புக்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் (iDEX), முக்கியமாகப் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் பல்வேறு பங்குதாரர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது. இத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சாத்தியமான ஒத்துழைப்புகளை மேற்பார்வையிட இது ஒரு குடை அமைப்பாக செயல்படுகிறது.
நவீன இராணுவப் போரில் ஒரு தேசத்தின் திறமையான சக்தியை தீர்மானிப்பதில் புதுமைபடைப்பு படிப்படியாக மிக முக்கியமான காரணியாக மாறி வருகிறது. iDEX போன்ற தளங்கள், பாதுகாப்பு இந்தியா தொடக்கச் சவால்கள் (DISC) மற்றும் திறந்த சவால்கள் (OC) போன்ற அதன் முதன்மைத் திட்டங்களின் மூலம் சிக்கலான சவால்களுக்கு இடையூறு விளைவிக்கும் தீர்வுகளைக் கண்டறிய இராணுவத்திற்கு உதவுகிறது. இதை ஒட்டி, இந்திய கடற்படை வெற்றிகரமாக iDEX வெற்றியாளரான சைப் அட்டிமொபைல்ஸ் சேவைகள் நிறுவனத்துக்கு சப்ளை ஆர்டரை வழங்கியுள்ளது.
இன்றுவரை, iDEX ஐந்து சுற்றுகள் பாதுகாப்பு இந்தியா தொடக்கச் சவால்கள் (DISC) மற்றும் திறந்த சவால்கள் (OC) 3 அறிமுகப்படுத்தியுள்ளது, தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களிடமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மேலும், iDEX ஆனது அதன் மான்ய உதவிக் கட்டமைப்பு, முன்மாதிரி மற்றும் ஆராய்ச்சி உடனடித் தொடக்க ஆதரவு (SPARK) மூலம் பல தொழில்நுட்பப் பகுதிகளில் திட்டங்களுக்கு நிதியளிக்க முடிந்தது, இது வளரும் தொழில்முனைவோருக்கு ரூ.1.5 கோடி வரை மான்யம் கிடைக்க வழி வகுக்கிறது .
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு வருட நிகழ்வு, டிஃபென்ஸ் எக்ஸ்போ 2022, தொடங்க உள்ளது, iDEX அதன் ஸ்டார்ட்அப்களை காட்சிப்படுத்தவும் அதன் வெற்றியாளரை அதன் முதன்மை நிகழ்வான மந்தனின் போது வழங்கவும் தயாராக உள்ளது. இந்த ஆண்டு iDEX மூன்று புதிய கூட்டாளர் இன்குபேட்டர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoUs) கையெழுத்திடும், அவைகள் துணிகர மேம்பாடு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளனர்.
iDEX குடும்ப அமைப்புகளாலும் உற்சாகத்திலும் வளர்ந்து வருவதால், Invest4iDEX என்ற தனித்துவமான நிகழ்வைத் தொடங்கி , புகழ்பெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் துணிகர முதலீட்டாளர்களை அழைக்கிறது, அதே நேரத்தில் நேரடிப் பார்வையாளர்களுக்கு தம்மைக் காட்சிப் படுத்தி அதன்முலம் முதலீடுகள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது. .
ஸ்டார்ட்அப்கள், கல்வித்துறை மற்றும் தனியார் தொழில்துறைக்கான பாதுகாப்பு R&D பட்ஜெட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீடு, புதுமை ஈடுபாட்டாளர்களை அதிநவீன தயாரிப்புகளை மேம்படுத்தவும் மற்றும் தொழில்நுட்ப தீர்வில் புரட்சியை ஏற்படுத்தவும் ஊக்குவித்துள்ளது. பொதுவான அபிலாஷைகளுக்கு ஏற்ப, iDEX பல்வேறு அறிவு அமர்வுகளை ஏற்பாடு செய்கிறது.
iDEX ஆனது, இந்தியாவின் வலுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் திறன் தளத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பு கண்டுபிடிப்புகளில் புதிய திறன்களை உருவாக்க முடியும். பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை பக்கம் பார்வையாளர்களை விழிப்பு உணர்திறன் பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை நோக்கி வளரும் தொழில்முனைவோரின் புரிதல் மேலும் பூர்த்தி செய்ய இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதரவு உதவும்.
******************
(Release ID: 1801924)
Visitor Counter : 168