வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8 முக்கியத் தொழில்துறைகளின் இணைந்த வளர்ச்சிக் குறியீடு கடந்த ஜனவரியில் 3.7 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 28 FEB 2022 5:07PM by PIB Chennai

எட்டு முக்கியத்  தொழிற்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குறியீடு  கடந்த ஜனவரியில் 144.4 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த 2021 ஜனவரி மாத பட்டியலுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 3.7 சதவீதம்(தற்காலிகம்) அதிகரித்துள்ளது. நிலக்கரி, இயற்கை வாயு, சுத்திகரிப்புப்  பொருட்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரத்துறைத்  தொழில்களின் வளர்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில், கடந்தாண்டின் இதே காலத்தை விட அதிகரித்துள்ளது. 

8 முக்கியத்  தொழிற் துறைகளின் கடந்த 2021ம் ஆண்டு  அக்டோபர் மாதத்தின் இறுதி வளர்ச்சி வீதம் 8.7 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சி வீதம் கடந்த 2021-22ல் 11.6 சதவீதமாக இருந்தது.

8 முக்கியத்  தொழிற்துறைகளின் கடந்த ஜனவரி மாத வளர்ச்சிப்  பட்டியலை தொழில் மற்றும்  உள்நாட்டு வர்த்தக  வளர்ச்சித்  துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகள், உரங்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை  எட்டு முக்கியத்  துறைகளின் வளர்ச்சி பட்டியல் அளவிடுகிறது.  இவற்றின் வருடாந்திர, மாதாந்திர அளவீடுகளின் விவரங்கள், வளர்ச்சி வீதங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801828

                                                                                **************************

 


(Release ID: 1801901) Visitor Counter : 226


Read this release in: English , Urdu , Hindi