பாதுகாப்பு அமைச்சகம்

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ ஜெகன் மோகன் ரெட்டி ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை விதியின் நகரத்திற்கு முறையாக அர்ப்பணித்தார்

Posted On: 28 FEB 2022 5:51PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு  ஜெகன் மோகன் ரெட்டி, பிப்ரவரி 27 அன்று கடற்படை கப்பல்துறை தளத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், விசாகப்பட்டினம் - டெஸ்டினி நகரத்தின் பெயரிடப்பட்ட, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக்  கட்டப்பட்டவழிகாட்டப்படும் திறன் கொண்ட  ஏவுகணை ஏந்திய ரகசிய அழிப்பான் INS விசாகப்பட்டினம் கப்பலை அர்ப்பணித்தார். குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மற்றும் MILAN 2022 போர்ப் பயிற்சியில்  பங்கேற்பதற்காக INS விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு  முதல் முறையாக வருகை தந்துள்ளது. .

 INS விசாகப்பட்டினம் P15B வகை வழிகாட்டப்படும் திறன் கொண்ட  ஏவுகணை ஏந்திய ரகசிய அழிப்பான் முன்னணிக் கப்பலாகும், இது 2021 நவம்பர் 21 ஆம் தேதி இயக்கி வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் இந்தியாவின் முதிர்ச்சியடைந்த கப்பல் கட்டும் திறனையும், 'சுய சார்பு இந்தியா ' இலக்கை அடைய  இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கான  முயற்சியைக்  குறிக்கிறது.

கப்பலின் பணியாளர்கள் அதன் பொன்மொழியான 'யஷோ லபஸ்வா' -அதாவது  'மகிமையை அடையுங்கள்' என்பதற்கு ஏற்ப செயல்படுகின்றனர். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியையும் பெருமையையும் அடைவதற்கான  இந்த வலிமைமிக்க கப்பலின் அடக்கமுடியாத ஆற்றல்  மற்றும் திறனை இதுகுறிக்கிறது. இந்த பொன்மொழி அதன் பணியாளர்கள்  அனைத்து இடையூறுகளையும் தாண்டி , சேவை மற்றும் தேசத்தின் பெருமையை எப்போதும் நிலைநிறுத்த ஊக்குவிக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கப்பலைச்  சுற்றிபி பார்த்தார்.  விழாவிற்குப் பிறகு பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

                           ***********

 



(Release ID: 1801861) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Marathi , Hindi