கலாசாரத்துறை அமைச்சகம்

விசாகப்பட்டினத்தில் விடுதலையின் அமிர்தாத் பெருவிழாவின் ஒரு பகுதியாக “மிலன் 2022’க்கான கலாச்சார நிகழ்ச்சிகளை கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 26 FEB 2022 6:30PM by PIB Chennai

சிறப்பம்சங்கள்:

* விடுதலையின் அமிர்தாத் பெருவிழாவின் ஒரு பகுதியாக கலாச்சார அமைச்சகம் சார்பில் இந்திரா காந்தி தேசியக் கலை மையம் IGNCA ஆல் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

* 140 வெளிநாட்டு உயர்மட்ட பிரதிநிதிகள், இந்திய கடற்படை பிரிவுகளுக்கு கூடுதலாக 14 வெளிநாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள்  இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.

* மிலன்  2022 க்கு 46 நட்பு நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.

* IGNCA ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்ச்சிகளை விசாகப்பட்டினத்தின் மேயர் கோலாகனி ஹரி வெங்கட குமாரி தொடங்கி வைக்கிறார்.

கலாச்சார அமைச்சகம் 'மிலன் 2022' இல் பங்கேற்கிறது: இதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) கிழக்கு கடற்படைப்  பிரிவு மற்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து 26 முதல் 28 ஆம் தேதி வரை விடுதலையின் அமிர்தாத் பெருவிழாவின் கீழ் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. விசாகப்பட்டினத்தின் ராமகிருஷ்ணா கடற்கரை மற்றும் மிலன் கிராமத்தில் பிப்ரவரி 2022.

மிலன் என்பது ஒரு பன்னாட்டுக்  கடற்படை பயிற்சியாகும், இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மிலன் 2022 இன் கருப்பொருள் 'தோழமை-ஒற்றுமை-ஒத்துழைப்பு' பயிற்சியின் உணர்வை நோக்கிய உண்மையான உருவகமாகும். மிலன்  2022 க்கு 46 நட்பு நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.

விடுதலையின் அமிர்தாத் பெருவிழாவின் ஒரு பகுதியாக கலாச்சார அமைச்சகத்தின் சார்பாக IGNCA மூலம் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகளில் பின்வருவன அடங்கும்:

பட்டம் பறக்க விடுதல்: 2022 பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை ஆர்.கே கடற்கரை பேருந்து நிறுத்தம் பின்புறம், கவ்வாலா கடைகளுக்கு அருகில், லாண்ட்மார்க் என்.டி.ஆர் சிலை.

ரங்கோலி வண்ணக்கோலம்: 2022 பிப்ரவரி 26 முதல் 28 வரை (முழு நாள்) ஆர்கே பீச் பஸ் ஸ்டாப் பின்புறம், கவ்வாலா கடைகளுக்கு அருகில், லாண்ட்மார்க் என்டிஆர் சிலை  2022 பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் 2022 பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் இரவு 18.40 மணிக்கு ராமகிருஷ்ணா கடற்கரையில் நடைபெறும் நகர அணிவகுப்பில் கலாச்சாரக் குழு பங்கேற்கிறது.

2022 பிப்ரவரி 26 முதல் 28 வரை, கடற்கரை சாலை மற்றும் மிலன் கிராமத்தில் இரவு 7:30 மணிக்கு கலாச்சார நிகழ்ச்சி.

IGNCA இயக்குனர்  டாக்டர். பிரியங்கா மிஸ்ரா வரவேற்பு உரையை வழங்குகையில், விடுதலையின் அமிர்தாத் பெருவிழா (AKAM) இன் கருத்து மற்றும் கருப்பொருள் மற்றும் மிலன் 2022 இல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்  குறிப்பிட்ட கடற்படைக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

விசாகப்பட்டினத்தின் மேயர் கோலாகனி ஹரி வெங்கட குமாரி, இந்நிகழ்ச்சியில் பேசுகையில்,  ஆந்திரப் பிரதேசத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவை இவ்வளவு தூரம் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த இந்திய மக்களின் அர்ப்பணிப்பு பற்றி கூறினார்.  ஆத்மநிர்பர் பாரதத்தின் உணர்வால் தூண்டப்பட்ட இந்தியா 2.0 ஐ செயல்படுத்தும் பிரதமர் மோடியின் தோலை நோக்கைச் செயல்படுத்தும் சக்தியையும் ஆற்றலையும் அவர்களுக்குள் வைத்துள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியத்வமும் குறிப்பிடத்தக்கது , ஏனென்றால் இந்தியக்  கடற்படை பிரிவுகளுடன் தோராயமாக 140 வெளிநாட்டு உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் 14 வெளிநாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் இதில் பங்கேற்க உள்ளன.  மேலும்  இந்த நாடுகளின் பிரதிநிதிகள் காத்தாடிகள் பறக்கவிட்டு  ரங்கோலி வண்ணக் கோல நிகழ்ச்சியில் பங்கேற்பதை  பார்வையாளர்களை காண்பார்கள். . அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளையும் விசாகப்பட்டினம் மற்றும் உலக அளவில் AKAM  ஆன்லைன் ஊடகம் மூலம் மக்கள் அனுபவிக்க முடியும்.

**************

 



(Release ID: 1801482) Visitor Counter : 245


Read this release in: Telugu , English , Urdu , Hindi