கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேலூர் மற்றும் சோம்நாத்பூரில் உள்ள ஹொய்சாள கோவில்களை யூனெஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது: திரு. ஜி. கிஷன் ரெட்டி

Posted On: 25 FEB 2022 5:50PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, தேவயத்தனம் - இந்தியக் கோயில் கட்டிடக்கலையின் பயணம் என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திய தொல்லியல் துறை கர்நாடகாவின் ஹம்பியில் 2022 பிப்ரவரி 25-26 தேதிகளில் நடத்துகிறது.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம் மாநாட்டில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு. கிஷன் ரெட்டி, பேலூர் மற்றும் சோம்நாத்பூரில் உள்ள ஹொய்சாள கோவில்களை யூனெஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது என்றார்.

இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக கோவில்கள் இருந்து வருகின்றன என்று திரு. அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களைப் பற்றி விவாதிப்பதே மாநாட்டின் நோக்கமாகும்.  கோவில் கட்டிடக்கலையின் பல்வேறு பாணிகளின் பரிணாமம் மற்றும் மேம்பாடு குறித்த உரையாடலைத் தொடங்கவும்  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அறிஞர்கள், இந்திய வரலாற்று, தொல்லியல், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும். நமது பாரம்பரியத்தைக்  கற்று மதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தை அறிஞர்கள் மற்றும் மாணவர்களிடையே உருவாக்குவது, மாநாட்டின் நோக்கம் ஆகும்.

இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோயில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோயில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக இந்தியத்  துணைகண்டத்தில் மட்டுமில்லாமல், தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா போன்ற  அண்டை நாடுகளிலும் கருதப்பட்டது. எனவே, கோவில் கட்டிடக்கலை மற்றும் நுட்பம் இந்தியாவில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு பரவியது மற்றும் இந்தக் கலை எவ்வாறு மாற்றம் அடைந்தது  என்பது சுவாரசியமான ஆய்வாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801126

                                *******************

 

 


(Release ID: 1801203) Visitor Counter : 266


Read this release in: English , Urdu , Hindi , Kannada