மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா

“அடையாளம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு: இந்தியாவின் நிதித்துறைப் புரட்சிக்கு முக்கியம்” என்ற தலைப்பில் ஆர்பிஐ, யுஐடிஏஐ ஒருநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2022 2:47PM by PIB Chennai

பெருந்தொற்று பாதித்துள்ள இந்தக் காலத்தில் பணிபுரிதல், பரிவர்த்தனைகள் செய்தல், தடையின்றி சேவைகள் வழங்குதல் ஆகியவை இணையதளத்திற்கு மாறியிருப்பதும் இந்தியா கண்டுள்ளது. வங்கிமுறை, நிதி சார்ந்த சேவை மற்றும் காப்பீடு போன்ற துறைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இணைய வழியாக ஒப்புதல் அளித்தல் மற்றும் சரிபார்த்தலுக்கு மாறின. வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அடையாளத்தை நிதி சார்ந்த சேவைகளுக்குக் கிடைக்கச் செய்வதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய கண்டுபிடிப்பு மையம் ஆகியவை இணைந்து கர்நாடகாவின் பெங்களூருவில் 2022 பிப்ரவரி 24 அன்று, “அடையாளம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு: இந்தியாவின் நிதித்துறைப் புரட்சிக்கு முக்கியம்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தின.

இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய ஆர்பிஐ துணை கவர்னர் திரு.டி.ரபி சங்கர், பணப்பரிமாற்ற தளத்தில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகின் தலைவராக மாறி வருகிறது என்றார். ரிசர்வ் வங்கியின் புதிய கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட்டதன் நோக்கம், தொழில்நுட்பம் மற்றும் வங்கி முறையில் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதாகும் என்றார். செலவைக் குறைத்தல், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், நிதி சார்ந்த சேவைகள் சென்று சேர்வதை அதிகரித்தல் காரணமாக ஃபின்டெக் திறனை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

யுஐடிஏஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுரப் கார்க் இந்தக் கருத்தரங்கில் பேசியபோது, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் குறிப்பாக அடித்தள நிலையில் உள்ளவர்களிடம் அடிப்படை மாற்றத்தை ஆதார் செய்துள்ளது என்றார்.

ரிசர்வ் வங்கியின் புதிய கண்டுபிடிப்பு மையத்தின் தலைவர் திரு.க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி திரு.ராஜேஷ் பன்சால் மற்றும் தொழில் துறை தலைவர்கள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1801145) வருகையாளர் எண்ணிக்கை : 243
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी