விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

3ம் ஆண்டைக் கொண்டாடுகிறது பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்

प्रविष्टि तिथि: 24 FEB 2022 6:40PM by PIB Chennai

நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் கிசான் சம்மான நிதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டம் இன்று  3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000, 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.  முதலில் இத்திட்டம் 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்டது, பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, இதில் பல தொழில்நுட்ப மற்றும் நடைமுறை மேம்பாடுகள் செய்யப்பட்டன. ஆகையால், இத்திட்டத்தின் பயன்களை, அதிக அளவிலான விவசாயிகள் திறம்படப் பெற முடியும்.

2022 பிப்ரவரி 22ம் தேதி வரை, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், அதன் பயன்கள் 11.78 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இத்திட்டத்தின் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.1.29 லட்சம் கோடி தற்போதைய கோவிட்-19 தொற்று காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

 

சுய பதிவு முறை: இத்திட்டத்தின் பயனாளிகள் கைப்பேசி செயலி, பிஎம் கிசான் இணையதளம் மூலமாகவும் அல்லது பொதுச் சேவை மையங்களுக்குச் சென்றும்  சுயமாகப் பதிவு செய்து கொள்ளலாம். 

மேம்படுத்தப்பட்ட மீட்பு நடைமுறை: தகுதியற்ற பயனாளிகளாக இருந்தால், அவர்களிடம் இருந்து மீட்கப்படும் தொகையை டி.டி.யாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தத் தேவையில்லை. மாநில அரசின் வங்கி கணக்கில் இருந்து, மத்திய அரசின் வங்கி கணக்குக்கு தானியங்கி முறையில் வெளிப்படையாகவும், எளிதாகவும் மாற்ற முடியும். 

குறைதீர்ப்பு உதவி மையம்: இத்திட்டத்தின் பயனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, முழுமையான குறைதீர்ப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச் செய்திக்  hகுறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800851

**********

 


(रिलीज़ आईडी: 1800893) आगंतुक पटल : 390
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu