நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ.611 கோடி மதிப்பில் போலி ரசீது வழங்கி ரூ.38.5 கோடி உள்ளீட்டு வரி மோசடி: மத்திய ஜிஎஸ்டி உளவுத்துறை கண்டுபிடிப்பு

प्रविष्टि तिथि: 24 FEB 2022 2:49PM by PIB Chennai

ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி செய்வதற்காக போலி ரசீதுகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் மோசடி நபர்களை  தில்லி தெற்கு மத்திய ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 போலீ ரசீதுகளை உருவாக்கி அதன் மூலம் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி செய்யும் பல நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தன. இவற்றை கண்டுபிடித்து, வரி மோசடிகளை ஜிஎஸ்டி ஆணையரக உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

 தில்லி மற்றும் தேசியத்  தலைநகர் மண்டலத்தில்,  போலி ரசீதுகளை உருவாக்கி சுழற்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த  54 போலி நிறுவனங்களைப்  பற்றி தகவல்களைச்  சேகரித்து அவற்றில்  தெற்கு தில்லியில் உள்ள மத்திய ஜிஎஸ்டி ஆணையரக உளவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   அங்கு போலி ரப்பர் ஸ்டாம்புகள்,  நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய லெட்டர்பேடு கடிதப்  புத்தகங்கள், செல்போன்கள், லேப்டாப்புகள், கைப்பற்றப்பட்டன.

ஆரம்ப கட்ட விசாரணையில் ரூ.611 கோடி மதிப்பு அளவில் இந்த நிறுவனங்கள் போலி ரசீதுகளை உருவாக்கியுள்ளனர் எனது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ரூ 38.5 கோடி வரி மோசடி செய்யப்பட்டுள்ளது.  இந்த குற்றத்தைப்  போலி நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் கீழ்  ஜாமீனில் வர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  போலி நிறுவனங்களை நடத்தி 3 முக்கிய நபர்கள் அங்கித் குப்தா,  ரவீந்திர சிங், ராஜேந்திர சிங் ஆகியோர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. 

***************

 


(रिलीज़ आईडी: 1800865) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी