பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய போர் நினைவுச் சின்னத்தின் 3-ம் ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது

Posted On: 24 FEB 2022 1:18PM by PIB Chennai

தேசிய போர் நினைவுச் சின்னத்தின் 3-ம் ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் குறிக்கும் வகையில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஏர் மார்ஷல் பி.ஆர் கிருஷ்ணா, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, மற்றும் இந்திய விமானப்படையின் துணைத் தளபதிகளுடன் சென்று தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

முப்படைகளின் பேண்டு வாத்தியக் குழுவினருடன் புதுதில்லி ரோஹினி பகுதியில் உள்ள விஎஸ்பிகே சர்வதேச பள்ளி மாணவ பேண்டு வாத்தியக் குழுவினரும் இணைந்து பார்வையாளர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், அந்த நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து உயிரிழந்த வீரரின் தியாகத்தை நினைவு கூர உள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளிடையே தேசப்பற்று, பணியில் அர்ப்பணிப்பு, வீரம், துணிவு மற்றும் உயிர்த்தியாகம் குறித்த நற்பண்புகளை கற்பிக்கும் நோக்கில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மாணவ பேண்டு வாத்தியக் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது

கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800741

----- 



(Release ID: 1800776) Visitor Counter : 184