ஜவுளித்துறை அமைச்சகம்
ஆயத்த ஆடை தொழில்துறை அதன் நிலைகளையும் அளவையும் அதிகரிக்க பிஎல்ஐ திட்டத்திலிருந்து பயன்பெற ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்த வேண்டும்: திரு உபேந்திர பிரசாத் சிங்
प्रविष्टि तिथि:
22 FEB 2022 5:37PM by PIB Chennai
இந்திய ஆயத்த ஆடை தொழில்துறை அதன் நிலைகளையும் அளவையும் அதிகரிக்க பிஎல்ஐ திட்டத்திலிருந்து பயன்பெற ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திரு உபேந்திர பிரசாத் சிங் கூறியுள்ளார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் 44-வது அமைப்பு தினத்தில் இன்று உரையாற்றிய அவர், ஆயத்த ஆடை துறை, அதிக முதலீட்டை மையமாகக் கொண்டது அல்ல, ஆனால் வேலைவாய்ப்பு கோணத்தில் மிகவும் முக்கியமானது என்றார். ஒருவேளை பின்புல ஒருங்கிணைப்பு தேவைப்படலாம். மேலும், நூற்பு மற்றும் நெசவு போன்ற மதிப்புத் தொடர் ஒருங்கிணைப்பையும் நீங்கள் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இணைய வழியில் உரையாற்றிய திரு உபேந்திர பிரசாத் சிங், பிஎல்ஐ திட்டத்துடன் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைப்பு ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை திட்டத்தையும் வெற்றிகரமாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
அடுத்த நிதியாண்டுக்குள் அல்லது அதற்கு அடுத்த ஆண்டுக்குள் இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி என்ற நிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தற்போதுள்ள நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்றார்.
இந்த இணையவழி நிகழ்ச்சியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவர் திரு நரேந்திர கோயங்கா துணைத்தலைவர் திரு சுதிர் சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800322
***************
(रिलीज़ आईडी: 1800366)
आगंतुक पटल : 372