பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

லாவண்டர் பூ, காஷ்மீரின் தோடா மாவட்ட தயாரிப்பு, இந்தியாவின் நறுமண திட்டத்தின் பிறப்பிடம் தோடா: மாவட்ட மேம்பாட்டு கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புகழாரம்

Posted On: 21 FEB 2022 7:44PM by PIB Chennai

காஷ்மீரின் தோடா மற்றும் கிஸ்த்வர் மாவட்டங்களின் மேம்பாட்டு கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும் உதம்பூர், கதுவா மற்றும் தோடா மக்களவை தொகுதி எம்.பி.யுமான டாக்டர் ஜித்தேந்திர சிங் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலையீடு இல்லையென்றால்கிலானி-கோஹா-சுத்மஹதேவ் தேசிய நெடுஞ்சாலை  உருவாகியிருக்காது.  இந்த நெடுஞ்சாலை முக்கியமான இணைப்பை ஏற்படுத்தி இப்பகுதியில் வேலைவாய்ப்பை அளிக்கிறது.  ரேட்டில் மற்றும் கிரு நீர்மின்சக்தி திட்டங்கள் இப்பகுதியை மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யும் பகுதிகளாக மாற்றியுள்ளது. முந்தைய அரசுகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் மீண்டும் தொடங்கப்பட்டது.

லாவெண்டர் (ஊதா பூ ) தோடா மாவட்ட தயாரிப்பு. இந்தியாவின் நிறுமன திட்டத்தில் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக தோடா உள்ளது.  இந்தப் பூவை, ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் ஊக்குவிக்க முடியும். சிஎஸ்ஐஆர் -ஐஐஐஎம்-ன் நறுமண திட்டம், வளரும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. ஸ்டார்-அப் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, தொழில்முனைவோர்களை வளர்க்கிறது. ஊதா புரட்சி குறித்த விழிப்புணர்வு, பலன்கள் குறித்து நிகழ்ச்சிகளை தோடா மாவட்டம், ஜம்மு, இதர மாவட்டங்களில் நடத்த வேண்டும். அதன்பின் லாவெண்டர் விவசாயத்தின் சிறப்பம்சங்களை நாட்டின் பிறபகுதிகளுக்கு தெரிவித்து, நறுமண திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800121

                           *****************************************



(Release ID: 1800148) Visitor Counter : 262


Read this release in: English , Urdu , Hindi , Punjabi