அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாடு முழுவதும் 75 இடங்களில் ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ என்ற நிகழ்ச்சி : பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது

Posted On: 20 FEB 2022 6:37PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் 75ம் ஆண்டை முன்னிட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விடுதலையில் அமிர்தத் திருவிழா நிகழ்ச்சியை ஒராண்டு காலத்துக்கு மத்திய அரசு கொண்டாடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளும்  மாநில அளவிலான அமைப்புகளும் இணைந்து, கடந்த  75 ஆண்டுகளில் அடைந்த  அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சாதனைகளைக் கொண்டாடி வருகிறது. 

இதற்காக ‘எங்கும் மதிக்கப்படும் விஞ்ஞானம்’ என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் 75 இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. வடக்கே காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் முதல் தெற்கே போர்ட் பிளேர் மற்றும் லட்சத்தீவில் உள்ள கவராட்டி தீவுகள் வரையிலும், மேற்கே அகமதாபாத் மற்றும் டாமன் முதல், கிழக்கே இடாநகர், கொஹிமா மற்றும் ஐசாவல் வரையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  இதற்கு  மேலும் அழகு சேர்க்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மெகா கண்காட்சிதேசிய அறிவியல் புத்தகக் கண்காட்சி ஆகியவை, புதுதில்லி ஜவஹர்லால் நேரு அரங்கத்தில்  நடத்தப்படுகின்றன.

 

இந்தியாவின் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், முற்போக்கான நாட்டை உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டும் விதத்திலும், அறிவியல் சாதனைக்கு காரணமானவர்களின் கதைகளை அவர்களுக்கு தெரிவிக்கவும்நாட்டின் சமூகப் பொருளாதா வளர்ச்சிக்கு அறிவியல் சமூகத்தின் உறுதியை வலியுறுத்தவும்எதிர்கால அறிவியல் திட்டங்களை தெரிவிக்கவும்நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களின் பணிகளை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.  நமது நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி, சுகதாரம், வேளாண்மை, வானியல் மற்றும் இதர துறைகளின் முன்னேற்றங்களுக்கு உதவியநாட்டின் அறிவியல் பாரம்பரியம்தொழில்நுட்ப திறன்களை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தும். 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி சபை , புவி அறிவியல் அமைச்சகம், அணுசக்தித் துறை, விண்வெளித்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபை மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் அதிகாரியின் தலைமையின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 

இது  தொடர்பான விவரங்கள் www.vigyanpujyate.in என்ற இணையளத்தில் உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799860(Release ID: 1799907) Visitor Counter : 223