அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உணவு மாசுபாட்டைக் கண்டறிய மிகவும் திறமையான வழியை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

Posted On: 18 FEB 2022 2:41PM by PIB Chennai

வெளிப்புற சக்திகளைப் பயன்படுத்தி தங்கம்-நானோரோடுகளின் பண்புகளை மாற்றியமைத்து மூலக்கூறுகளின் அளவைக் கண்டறியக்கூடிய சென்சார்களை உருவாக்கி, உணவு மாசுபாட்டைக் கண்டறிய மிகவும் திறமையான வழியை சமீபத்திய ஆய்வொன்றில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

தங்க நானோரோடுகள் தனித்துவமான பிளாஸ்மோனிக் பண்புகளைக் கொண்டுள்ளன. சிறிய அளவிலான துகள்களைக் கண்டறிவதிலும் (மூலக்கூறுகளின் ஃபெம்டோ-மோல்கள்) குறைந்த குவாண்டம் வெளிப்படுத்தும் மூலக்கூறுகளின் ஒளிரும் மேம்பாட்டிலும் அவை உணரிகளாகப் பயன்படுத்தப்படலாம்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டபிள்யூ. ஜைபுதீன் மற்றும் ரஞ்சினி பந்தோபாத்யாய் ஆகியோர் இதை கண்டறிந்துள்ளனர்.

 

வெளிப்புற சக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த நானோரோடுகளின் பண்புகளை மாற்றியமைக்க முடியும் என்றும்  மூலக்கூறுகளின் சுவடு அளவுகளைக் கண்டறிய சென்சார்களை உருவாக்குவது போன்ற தொழில்நுட்ப தாக்கங்களுக்கு இது வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

வெளியீட்டு இணைப்புகள்: DOI: 10.1039/d1sm00820j

 

https://pubs.rsc.org/en/content/articlelanding/2021/sm/d1sm00820j

 

 

மேலதிக தகவல்களுக்கு ரஞ்சினி பந்தோபாத்யாய் (ranjini[at]rri[dot]res[dot]in) மற்றும் அபிகேல் டிசோசா (abigail[at]rri[dot]res[dot]in) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799255

                                *****************


(Release ID: 1799430) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Bengali