நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெங்காய விலை கடந்தாண்டு விலையை விட 22.36 சதவீதம் குறைவு: மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2022 6:58PM by PIB Chennai

அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சில்லரை விலை, நேற்றைய நிலவரப்படி கிலோ ஒன்றுக்கு ரூ.35.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இது கடந்தாண்டு இதே காலத்தில் விற்கப்பட்ட விலையை விட 22.36 சதவீதம் குறைவு.  கடந்த காரிப் பருவ வெங்காய வருத்து சீராக உள்ளது. ராபி பருவ வெங்காய வரத்து வரை, இது இதே நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை 2021-22ம் ஆண்டில் நிலையாக இருந்தது.  விலை நிலைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், மத்திய அரசின் மிகப்பெரிய  வெங்காய  சேமிப்பு கிடங்கில் இருந்து 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் விநியோகிக்கப்பட்டது. கடந்த மாதம் விலை அதிகரித்த மாநிலங்களில், இந்த வெங்காயம் விநியோகிக்கப்பட்டது.  மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கிலோ ரூ.21 என்ற அளவில் வெங்காயம் வழங்கப்பட்டது. தொலைதூர பகுதிகளுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் சேர்த்து கிலோ ரூ.26-க்கு வெங்காயம் வழங்கப்பட்டது.  மத்திய அரசின் மெகா கிடங்கில் இருந்து வெங்காயம் வழங்கப்பட்டதால், அதன் விலை நிலையாக உள்ளது.

அதேபோல், உருளையின் சில்லரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.20.58- ஆக உள்ளது. இது கடந்த மாத விலையை விட 6.96 சதவீதம் குறைவு.

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. தற்போது அகில இந்திய அளவில் இதன் சராசரி விலை ரூ.26.69-ஆக உள்ளது. இது கடந்தமாத விலையை விட குறைவு.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799364

                                                                                                ****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1799424) வருகையாளர் எண்ணிக்கை : 329
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी