சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம்

Posted On: 18 FEB 2022 6:36PM by PIB Chennai

தேசிய தலைநகர் மண்டலம் முழுவதிலும் காற்று மாசுபாட்டின் அச்சுறுத்தலை திறம்பட சமாளிக்கும் நோக்கில், தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதை ஒட்டிய இடங்களில் 15.02.2022 வரை மொத்தம் 4890 தளங்களை காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படைகள் ஆய்வு செய்துள்ளன.

 

தில்லி-தேசிய தலைநகர் பகுதியின் காற்றின் தரத்தை மேம்படுத்த ஆணையம் வழங்கிய சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் தற்போதைய விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அறிய இந்த ஆய்வு நடைபெற்றது.

 

தில்லி-தேசிய தலைநகர் மண்டலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதிமீறல் செய்பவர்களைக் கண்டறியவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 15.02.2022 வரை, மொத்தம் 392 அலகுகள்/நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 

காற்று மாசுபாடுகளைக் குறைப்பதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளுடன், தில்லியில்   94 தளங்கள், ஹரியானாவின் தேசிய தலைநகர் பகுதியில் 92 தளங்கள், உத்தரப் பிரதேசத்தில் 173 தளங்கள் மற்றும் ராஜஸ்தானில் 48 தளங்களை ஆய்வு செய்து மூடுவதற்கான அறிவிப்புகளை பறக்கும் படைகள் வெளியிட்டுள்ளன.

 

மொத்தமுள்ள 407 தளங்களில், 187 அலகுகள்/நிறுவனங்கள் தகுந்த சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்ட பிறகு மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறிய மீறல்கள் தொடர்புடைய சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கைகளுக்காக  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799349

                                                                                                ******************



(Release ID: 1799390) Visitor Counter : 192


Read this release in: English , Urdu , Hindi