வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வீட்டுவசதி திட்ட பயனாளிகளுடனான சந்திப்புக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் தலைமை

प्रविष्टि तिथि: 17 FEB 2022 4:36PM by PIB Chennai

"எங்கள் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது, சமூகத்தில் கண்ணியமான இடத்தை இப்போது பெற்றுள்ளோம்" என்று பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) பயனாளி ஒருவர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளரான திரு. மனோஜ் ஜோஷியிடம் இன்று கூறினார். 

புதுதில்லியில் காணொலி மூலம் நடைபெற்ற பிரதமரின் வீட்டுவசதி திட்ட பயனாளிகளுடனான சந்திப்புக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் தலைமை வகித்தார். இணை செயலாளரும் திட்ட இயக்குநருமான திரு. குல்தீப் நாராயணும் இதில் கலந்துகொண்டார்.

பயனாளிகளுடன் நேரடியாக உரையாடுவதன் மூலம் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், அஸ்ஸாம், ஜார்கண்ட் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பயனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவங்கள், திட்டத்தின் கீழ் தங்களுக்கென ஒரு நல்ல வீட்டைப் பெற்ற பிறகு கிடைத்த நன்மைகள் பற்றி செயலாளர் அறிந்து கொண்டார்.

அவர்களின் வீடுகளின் காணொலி சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது. அசாமில் இருந்து திருமதி. குந்தி சிங் மற்றும் திருமதி மிலோன் மண்டல் ஆகியோர் இந்த இணையவழி உரையாடலின் ஒரு பகுதியாக இருந்தனர்.

ஜார்கண்டிலிருந்து திருமதி. மனிஷா கச்சாப் மற்றும் திருமதி. மாமணி பால் ஆகியோரும், கேரளாவில் இருந்து திருமதி. ரதன்மணி மற்றும் திருமதி. சுமா ஆர். ஆகியோர்  நிகழ்ச்சியில் இணைந்தனர்.

தங்களுக்கு சொந்த வீடு கிடைத்திருப்பதன் மூலம் கனவு நனவாகி உள்ளது என்றும், இத்திட்டம் இல்லையென்றால் தங்களால் வீடு கட்ட முடியாமல் போயிருக்கும் என்றும் பயனாளிகள் செயலாளரிடம் தெரிவித்தனர். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799053

***************


(रिलीज़ आईडी: 1799075) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali