அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நிபுணத்துவம் பெற்ற முன்னணி நாடுகளுடன் கூட்டு முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலர் வலியுறுத்தல்
Posted On:
17 FEB 2022 4:27PM by PIB Chennai
நிபுணத்துவம் பெற்ற நாடுகளுடன் கூட்டு முன் முயற்சிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலர் டாக்டர் எஸ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். உலக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியின் (ஜி.ஐ.டி.ஏ) 10-வது நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகத்தரத்திற்கு இணையாக தொழில்நுட்பங்களை உருவாக்க நிபுணத்துவம் பெற்ற முன்னணி நாடுகளுடன் இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறினார்.
உலக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கூட்டணி வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை பாராட்டிய டாக்டர் சந்திரசேகர், இந்த கூட்டு முயற்சிகளை மேலும் அதிக நாடுகளுடன் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் உலக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியின் 2021-ம் ஆண்டுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் 3 சிறு நிறுவனங்கள், 2 நடுத்தர நிறுவனங்கள், 2 பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. நீடித்த வருங்காலத்துக்காக கூடி உருவாக்குவது என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799049
***************
(Release ID: 1799071)