நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்திக்கான ஜெர்மன் மத்திய அமைச்சகம் ஆகியவற்றின் தலைமையில் தரமான உள்கட்டமைப்புக்கான இந்திய-ஜெர்மன் பணிக்குழுவின் எட்டாவது வருடாந்திர கூட்டம் இன்று காணொலி முறையில் நடைபெற்றது
Posted On:
16 FEB 2022 6:11PM by PIB Chennai
2013 முதல் ஆண்டுதோறும் கூடும் பணிக்குழு, இருதரப்பு வர்த்தகத்தை ஆதரிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த பங்குதாரர்களின் தேவைகளை கணக்கில் கொண்டு நாட்டில் தரமான உள்கட்டமைப்பை ஆதரிக்கவும் வலுப்படுத்தவும் ஒத்துழைக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காட்டுகிறது.
நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளர் திரு ரோஹித் குமார் சிங் கூறுகையில், இந்தியாவின் முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக ஜெர்மனி உள்ளது என்றார். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அரசின் முயற்சியின் வெற்றிக்காக தரப்படுத்தல், தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் சந்தைக் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நன்கு நிறுவப்பட்ட மற்றும் வலுவான, தரமான உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கூட்டத்தின் போது கையொப்பமிடப்பட்ட வேலைத் திட்டம் 2022, தரமான உள்கட்டமைப்புகளின் சிறந்த செயல்பாட்டில் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு அமைச்சகங்கள், தரநிலைப்படுத்துதல் அமைப்புகள் மற்றும் தொழில்துறை போன்ற தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் தரமான உள்கட்டமைப்பின் வெவ்வேறு அம்சங்களில் ஒருவருக்கொருவர் மற்றவரது அணுகுமுறைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜெர்மனி தரப்பின் இணைத் தலைவரும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கைக்கான ஜெர்மன் மத்திய அமைச்சகத்தின் டிஜிட்டல் மற்றும் புத்தாக்கக் கொள்கையின் தலைமை இயக்குநர் டாக்டர் டெனிலா ப்ரோன்ஸ்ட்ரப், இந்தியப் பிரதிநிதிகளை காணொலிக் கூட்டத்திற்கு வரவேற்றார்.
சவால்களுக்கு இடையிலும் பணிக்குழுவின் கட்டமைப்பின் கீழ் இரு தரப்பும் தொடர்ந்து ஒத்துழைத்தை அவர் குறிப்பிடார். இது ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளின் சிறந்த அறிகுறியாகும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798826
*****
(Release ID: 1798893)
Visitor Counter : 179