சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம்: மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடக்கம்
Posted On:
16 FEB 2022 5:18PM by PIB Chennai
அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
ஐந்தே இன மக்களில் சிலர், பட்டியலினத்திலும் இடம் பெறாமல், அவர்களுக்குரிய சலுகைகளையும் பெறாமல் உள்ளனர். இது போன்ற மக்களுக்கான, பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வீரேந்திர குமார், ‘‘இந்தியாவில் நாடோடியாக சுற்றித்திரியும் மக்கள், பொருளாதாரத்தில் மிகவும் மின்தங்கிய நிலையில் உள்ளனர்’’ எனத் தெரிவித்தார். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1871ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கிரிமினல் பழங்குடியினர் சட்டம் தான் இப்பிரிவு மக்களின் துயரத்துக்கு காரணம். இந்த சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டன. காலனி அரசின் கொள்கைகள், இந்த மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதித்தன.
சுதந்திரத்துக்குப்பின்னும், 70 ஆண்டுகளுக்கு மேலாக, திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களால் இவர்கள் பயன் அடையவில்லை. மாநில அரசுகள் வழங்கும் பட்டியலின மக்களுக்கான ஆதரவை இவர்கள் இழந்தனர். இவர்களின் முன்னேற்றத்துக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தே.ஜ.கூட்டணியின் முதல் ஆட்சியின் போது கடந்த 2003ம் ஆண்டு அக்டோபரில் இப்பிரிவு மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முதல் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ரென்கி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பல மாநிலங்களில் உள்ள அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களை அடையாளம் கண்டு முறையாக பட்டியலிடும் பணி இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துறை அடிப்படையில், இந்த மக்களின் மேம்பாடு மற்றும் நல வாரியத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு அமைத்தது.
அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் 4 முக்கிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது .
1. கல்வி மேம்பாடு - இப்பிரிவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் தொழில் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத இலவசப் பயிற்சி.
2. பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் மூலம் சுகாதார காப்பீடு.
3. வருமானத்துக்கு வாழ்வாதார உதவிகள்
4. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் மூலம் வீடுகள்.
இத்திட்டம் மூலம் 2021-22ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.200 கோடி செலவிடப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக இணையதளம் ஒன்றை சமூகநீதித் துறை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் நாடோடி மக்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளம் விண்ணப்பதாரர்களின் நிகழ்நேர தகவல்களை தெரிவிக்கும். இப்பிரிவுப் பயனாளிகளுக்குான பணம், அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நாடோடி மக்களின் மேப்பாட்டில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798792
*********
(Release ID: 1798851)
Visitor Counter : 702