அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாடி உள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
Posted On:
16 FEB 2022 5:14PM by PIB Chennai
மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாடி உள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள பிரத்வி பவனில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்டக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர், 38 அமைச்சகங்கள் / துறைகளிடமிருந்த, விண்வெளி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பைக் கோரி 200க்கும் மேற்பட்ட பிரேரணை வரப்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்ட பிறகு இதுவரை பயன்படுத்தப்படாத வளங்களைக் கண்டறிய ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதாகவும், டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். விண்வெளித்துறையில் தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.50 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை தனிப்பட்ட முறையில் முதலீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற நிறுவனங்கள் விண்வெளியில் கழிவு (உடைந்து விழும் பாகங்கள் சேகரிப்பு) மேலாண்மைக்கான மென்பொருள்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798791
***************
(Release ID: 1798815)
Visitor Counter : 234