சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தின் நிவாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்

Posted On: 15 FEB 2022 5:34PM by PIB Chennai

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள் மற்றும் உதவி சாதனங்களை விநியோகிப்பதற்கான நிகழ்ச்சி அலிம்கோ மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் உடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

விழாவின் தலைமை விருந்தினரான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முகாமை தொடங்கி வைத்தார், இதில் மொத்தம் 737 பல்வேறு வகையான உதவி சாதனங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 409 பயனாளிகளுக்கு 45 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், பிரதமரின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும், அதிகாரமளிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறினார். தமது அமைச்சகம் ஆற்றிய பணிகளைப் பற்றித் தெரிவிக்கையில், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் ஏழைப் பிரிவினரை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார் அவர்.

 

தற்சார்பு இந்தியா திட்டத்தைப் பின்பற்றி, தமது அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ, பார்வையற்றோருக்கான நவீன கைத்தடியான 'சுகம்யா கேன்' ஒன்றை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798513

                                                                                                ******************

 



(Release ID: 1798625) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi , Punjabi