சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்படுவதற்கான கூட்டத்திற்கு டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்
Posted On:
15 FEB 2022 7:12PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இணைந்து செயல்படுவது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர். மன்சுக் மாண்டவியா பேசுகையில், “தற்சார்பு இந்தியா கொள்கையின்படி ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ரசாயனத் துறை மட்டுமல்லாது, பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த மருந்து மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள துறைகளை நாம் அடையாளம் காண வேண்டும்,” என்றார்.
வாரியத்தின் பணிகளை விரிவுபடுத்தி, அதன் செயல்பாட்டை மேலும் திறம்பட முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய டாக்டர். மன்சுக் மாண்டவியா, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இந்தியாவின் அனைத்து தொழில்துறை குழுக்களையும் அணுகி, சிறு மற்றும் பெரிய தொழில்முனைவோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
“அவர்களின் புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி நாம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது நேர்மறையான முடிவுகளைத் தருவதோடு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும்”, என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798567
******************
(Release ID: 1798604)
Visitor Counter : 239