பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓமன் கடற்படை கமாண்டர் இந்தியா வருகை

Posted On: 14 FEB 2022 6:16PM by PIB Chennai

ஓமன் கடற்படைத் தளபதி  ரியர் அட்மிரல் சைப் பின் நசீர் பின் மொஹ்சின் அல் ரஹ்பி நல்லெண்ணப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியக் கடற்படையுடன் இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதையும், இந்தியாவுடன் புதிய பாதுகாப்பு உறவுகளை ஆராய்வதையும் இந்தப் பயணம் நோக்கமாக கொண்டுள்ளது.

 

இந்தியா வந்த ஓமன் கடற்படைத் தளபதி , தேசியப் போர் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.  அவரை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் தில்லியில் கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் வரவேற்றார். அவருக்கு இந்தியக் கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் இரு நாடுகளின் கடற்படைகள் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து, இருநாட்டு கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தினர். 

 

ஓமன் கடற்படை தளபதி , மும்பையில் உள்ள இந்திய கடற்படையின்  மேற்குக் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிடவுள்ளார். அங்கு அவர் அதன் தலைமை அதிகாரியைச் சந்தித்துப் பேசுகிறார்  மற்றும் மும்பை கடற்படை தளத்தில் உள்ள இந்திய கடற்படைக் கப்பல்களையும் அவர் பார்வையிடுவார்.

 

ஓமன் கடற்படை தளபதியின் இந்தப் பயணம், இருநாட்டு கடற்படை இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இருநாடுகளின் கடற்படைகளும் கடந்த 1993ம் ஆண்டிலிருந்து ‘நசீம் அல் பஹர்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு இந்தப் பயிற்சி கோவாவில் நடந்தது. அடுத்த கூட்டுப் பயிற்சி இந்தாண்டு இறுதியில் நடைபெறும். இரு நாட்டுக் கடற்படை இடையே நல்லுறவு நீடிப்பதால், ஐஎன்ஸ் சுதர்ஷினி என்ற இந்திய போர்க்கப்பல் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மஸ்கட் சென்றது.

                                                                                                **************

 


(Release ID: 1798358) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Hindi