ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளிக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் தேதி மேலும் நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2022 7:11PM by PIB Chennai

ஜவுளிக்கான PLI திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 28.02.2022 வரை ஜவுளி அமைச்சகம் மேலும் நீட்டித்துள்ளது. முன்னதாக, ஜவுளிக்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி ஜனவரி 31, 2022 வரை இருந்தது, இது பிப்ரவரி 14, 2022 வரை நீட்டிக்கப்பட்டது.

 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு https://pli.texmin.gov.in/mainapp/Default.

செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான இணைப்பு https://pli.texmin.gov.in/Guidelines/Approved%20Guidelines%20for%20PLI%20scheme%20for%20Textiles.pdf.

                                *******************


(வெளியீட்டு அடையாள எண்: 1798355) வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi