தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூஸ் ஆன் ஏர் வானொலி நேரலை ஒலிபரப்பு உலகத் தரவரிசை

Posted On: 14 FEB 2022 12:31PM by PIB Chennai

பல்வேறு நாடுகளில் நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலியின் நேரலை ஒலிபரப்புகளுக்கான சமீபத்திய உலகத் தரவரிசையில், அகில இந்திய வானொலியின் ‘எப் எம் கோல்ட் தில்லி’ உட்பட தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் சீனாவில் மிகவும் பிரபலமடைந்து வருவது தெரிய வந்துள்ளது. 

பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் செயலி, அகில இந்திய வானொலியின் 240-க்கும் மேற்பட்ட வானொலி அலைவரிசைகளை நேரலையாக ஒலிபரப்பி வருகிறது. இந்த ஒலிபரப்பு 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பெருமளவில் உள்ள நேயர்களால் கேட்கப்படுகிறது. 

இதில் விவித் பாரதியின் தேசிய ஒலிபரப்பு அகில இந்திய வானொலி சேவைகளில் உலகளவில் அதிகம் பேரால் கேட்கப்படும் வானொலி சேவையாக உள்ளது.  கொச்சி எப் எம் ரெயின்போ இந்த பட்டியலில் 2 ஆம் இடத்திலும், ஏஐஆர் மஞ்சேரி 3 ஆம் இடத்திலும் உள்ளன.  அகில இந்திய வானொலியின் சென்னை ரெயின்போ அலைவரிசை இந்த பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகளில் நியூஸ் ஆன் ஏர் செயலி, அமெரிக்காவில் அதிக நேயர்களால் கேட்கப்படுகிறது.  நியூஸ் ஆன் ஏர் செயலியின் முதல் 10 ஒலிபரப்புகளை பொறுத்தவரை அமெரிக்காவில் விவித் பாரதி தேசிய ஒலிபரப்பு முதலிடத்திலும் அகில இந்திய வானொலி தமிழ் 3 ஆவது இடத்திலும், அகில இந்திய வானொலி திருச்சிராப்பள்ளி எப் எம் 10 ஆவது இடத்திலும் உள்ளன. 

இங்கிலாந்தில் சென்னை ரெயின்போ 3 ஆம் இடத்திலும், ஏஐஆர் கொடைக்கானல் 6 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவில் சென்னை ரெயின்போ  3 ஆவது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூரில் சென்னை ரெயின்போ 2 ஆவது இடத்திலும், ஏஐஆர் கொடைக்கானல் 3 ஆவது இடத்திலும், சென்னை பி அலைவரிசை 5 ஆம் இடத்திலும், சென்னை எப் எம் கோல்டு 6 ஆவது இடத்திலும், ஏஐஆர் காரைக்கால் 7 ஆவது இடத்திலும், கோவை எப் எம் ரெயின்போ 8 ஆவது இடத்திலும், ஏஐஆர் மதுரை 9 ஆவது இடத்திலும், ஏஐஆர் திருச்சி எப் எம் 10 ஆவது இடத்திலும் உள்ளன. 

சவூதி அரேபியாவில் சென்னை ரெயின்போ 2 ஆவது இடத்திலும், ஏ ஐ ஆர் கொடைக்கானல் 10 ஆவது இடத்திலும் உள்ளன.  ஜெர்மனியில் கோவை எப் எம் ரெயின்போ 3 ஆவது இடத்திலும் சென்னை ரெயின்போ 4 ஆவது இடத்திலும், சென்னை பிசி அலைவரிசை 5 ஆம் இடத்திலும், சென்னை பி 6 ஆவது இடத்திலும், சென்னை விபிஎஸ் 7 ஆவது இடத்திலும் உள்ளன.

ஏ ஐ ஆர்  சென்னை ரெயின்போ உலகளவில் ஆஸ்திரேலியாவில் அதிக நேயர்களால் கேட்கப்படுகிறது.  அதற்கு அடுத்தபடியாக ஜப்பானும், 3 ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும் உள்ளன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798231

***************


(Release ID: 1798286) Visitor Counter : 240