பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க தேசியப் பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள்

Posted On: 11 FEB 2022 5:58PM by PIB Chennai

கொரோனா தொற்று நேரத்தில், குடும்ப வன்முறைகளைச்  சந்திக்கும் பெண்களுக்கு உதவ பல நடவடிக்கைககைளை தேசிய பெண்கள் ஆணையம் மேற்கொண்டது. முடக்க காலத்தில், புகார்களை தெரிவிக்க 7217735372 என்ற வாட்ஸ் ஆப் உதவி எண் வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி, பெண்களுக்கான 24 மணி நேரமும் ஆன்லைன் மூலம் வழிகாட்ட  7827170170 என்ற உதவி எண்ணும் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், மருத்துவமனைகள், சட்ட உதவி அதிகாரிகள், உளவியல் கவுன்சலிங் ஆகியவற்றுடன் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது

இந்த நடவடிக்கைகள், தேசிய பெண்கள் ஆணையத்தில், பெண்கள் புகார் அளிக்க உதவின. கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேசிய பெண்கள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.  தமிழகத்திலிருந்து கடந்த 2020ம் ஆண்டில் 464 புகார்களும், 2021ம் ஆண்டில் 581 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  புதுவையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டில் 10 புகார்களும், 2021ம் ஆண்டில் 14 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797705

***********


(Release ID: 1797798)
Read this release in: English , Urdu , Marathi