தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
புகழ்பெற்ற மணிப்பூரி நடனக் கலைஞர் சவிதா பென் மேத்தாவின் தனிப்பட்ட வீடியோ சேகரிப்புகளை வாங்கியது இந்திய தேசிய திரைப்பட காப்பகம்(NFAI)
Posted On:
11 FEB 2022 3:56PM by PIB Chennai
மணிபூரி நடனக் கலைஞர் சவிதா பென் மேத்தாவின் தனிப்பட்ட வீடியோப் படத் தொகுப்புகள், தற்போது இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தின் வசம் வந்துள்ளது.
இந்த வீடியோ தொகுப்புகள் எல்லாம் 8 எம்எம் மற்றும் சூப்பர் 8எம்எம் பிலிம்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள். ‘ஹோம் மூவிஸ்’ என்ற தனிப்பட்ட சிறிய படங்களைப் படம் பிடிக்க இந்த வகை பிலிம்கள் பயன்படுத்தப்படுகின்றன. புகழ்பெற்ற நடனக் கலைஞர் சவிதா பென்னின், கோடாகுரோம் மற்றும் கோடாகுரோம் 2 பிலிம் வீடியோத் தொகுப்புகளை, பாதுகாக்கப்படும் திரைப்படப் பட்டியலில் என்எப்ஏஐ சேர்த்தள்ளது. இவை முக்கியமான சமூக ஆவணங்களாக இருக்கும். இந்த கோடாகுரோம் மற்றும் கேடாகுரோம் 2 வகை பிலிம்கள் முறையே 1935 மற்றும் 1961 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டவை. தனிப்பட்ட உபயோகத்துக்கு இந்த பிலிம்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த மணிப்பூரி சாஸ்திரிய நடனம், பகவான் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் இடையே உள்ள காதல் உறவை சித்தரிக்கிறது. இது அழகான உடைகள், வெளிப்படையான மற்றும் மென்மையான தோரணைகளின் பயன்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
ஒப்பற்ற மற்றும் மிக வேகமான அசைவுகளுடன் கூடிய மணிப்பூரி நடனத்தை உலகளவில் சவிதா பென் மேத்தா பிரபலப்படுத்தினார். மணிப்பூர் நடனத்தில் இவர் மிகச் சிறந்த கலைஞர். குஜராத்தில் பிறந்த இவர், பாலே நடனத்துறையில் இயக்குனராகவும், நடன இயக்குனராகவம் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.
இந்த வீடியோ பிலிம்களை பெற்றது குறித்து என்எப்ஏஐ இயக்குனர் திரு. பிரகாஷ் மேக்டம் கூறுகையில், ‘‘இந்த குறிப்பிடத்தக்க 8 எம்எம் பிலிம் தொகுப்பை பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய தேசியத் திரைப்பட காப்பகத்திற்கு அரிய வரவாக உள்ளது. இந்த தொகுப்பு வடகிழக்கு இந்தியாவில் படம்பிடிக்கப்பட்ட சவிதா பென் மேத்தாவின் நடனக் காட்சிகள் அடங்கியவை. இதை நாங்கள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கம் செய்யவுள்ளோம். இந்தத் திரைப்படங்களை வழங்கிய சவிதா பென் மேத்தாவின் உறவினரும், தொழிலதிபருமான திரு ஜே மேத்தாவுக்கு நன்றி. திருமிகு. சவிதா பென் மேத்தா, பல மொழிகளை அறிந்தவர் என்றாலும், இந்த படத்தின் வாசகங்கள், மணிப்பூரி மொழியில் அவரது சொந்த கையெழுத்தை கொண்டவையாக உள்ளன.
இந்தத் திரைப்படங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டதை ஈகா ஆவண காப்பகச் சேவைகள் நிறுவனத்தின் இயக்குனர் திருமிக. தீப்தி சசிதரன், திருமிகு ராகேல் நரோன்ஹா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
************
(Release ID: 1797768)
Visitor Counter : 175