நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நாடு முழுவதும் உணவு தானியங்களை சேமிப்பதற்காக 2199 கிடங்குகளை (சொந்தமாக/வாடகைக்கு) இயக்குகிறது.
நாடு முழுவதும் உணவு தானிய சேமிப்புக்காக, 2199 கிடங்குகளை இந்திய உணவுக் கழகம்(எப்சிஐ) செயல்படுத்தி வருகிறது
प्रविष्टि तिथि:
11 FEB 2022 4:48PM by PIB Chennai
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த திரு அஸ்வினி குமார் சவுபே:
உணவு தானிய கிடங்குகளின் கொள்ளளவு அதிகரிப்பது தொடர்ச்சியான நடைமுறை. இருப்பு நிலவரம் அடிப்படையில் சேமிப்பு திறன், இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) தொடரச்சியாக மதிப்பீடு செய்து, கண்காணித்து அதற்கேற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்குகிறது / வாடகைக்கு எடுக்கிறது. கீழ்கண்ட திட்டங்கள் மூலம் சேமிப்பு திறனை இந்திய உணவுக் கழகம் அதிகரித்துள்ளது.
தனியார் தொழில் முனைவோர் உத்திரவாத திட்டம் (PEG)
மத்திய திட்டம் (CSS)
பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் அமைக்கப்படும் சேமிப்பு குழிகள்.
மத்திய மாநில கிடங்கு கழகம் / கிடங்கு கழகங்களில் இருந்து கிடங்குகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
தனியார் கிடங்கு திட்டம் மூலம் கிடங்குகளை வாடகைக்கு எடுத்தல்.
நாடு முழுவதும் உணவு தானிய சேமிப்புக்காக, கடந்த 01.01.2022, வரை இந்திய உணவுக் கழகம் 2199 கிடங்குகளை ( சொந்தமானவை / வாடகைக்கு எடுத்தவை) செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 68 கிடங்குகளை இந்திய உணவுக் கழகம் செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் நிலவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1797625
************
(रिलीज़ आईडी: 1797725)
आगंतुक पटल : 382