வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐடி தொழிற்சேவைகள் ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2022 3:38PM by PIB Chennai

நாட்டில்  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இந்திய  மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மென்பொருள் உற்பத்திக்கான தேசிய கொள்கை – 2019, அடுத்த தலைமுறை மேம்பாட்டு திட்டம் ஆகியவை இதில் சில நடவடிக்கைகளாகும்.

 இந்திய மென்பொருள் பூங்காக்கள் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி 2020-21-ல் ரூ.5.02 லட்சம் கோடியாக இருந்தது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் அலகுகளின் மூலமான ஏற்றுமதி 2020-2021-ல் ரூ.5.1 லட்சம் கோடியாக இருந்தது.

மென்பொருள் உற்பத்தி குறித்த தேசிய கொள்கை மூலம் 2025- ஆம் ஆண்டுக்குள் 3.5 மில்லியன் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

 அடுத்த தலைமுறை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தகவல் தொழில்நுட்ப தொழில் அதிக வேக வளர்ச்சியை அடைவதுடன் புதிய வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1797711) வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali